Enable Javscript for better performance
செங்கம் அருகே தண்ணீர் தேடி வந்த 9 காட்டுப் பன்றிகள் கிணற்றில் விழுந்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அருகே தண்ணீர் தேடி வந்த 9 காட்டுப் பன்றிகள் கிணற்றில் விழுந்து சாவு

    By DIN  |   Published on : 27th March 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே திங்கள்கிழமை இரவு தண்ணீர் தேடி வந்த 9 காட்டுப் பன்றிகள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தன.
     செங்கத்தை அடுத்த பிஞ்சூர் வனப் பகுதியில் தண்ணீர் இல்லாததால், 14 காட்டுப் பன்றிகள் தண்ணீர் தேடி கூட்டமாக பேயாலம்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு வந்துள்ளன.
     பின்னர், அங்குள்ள விவசாயக் கிணற்றில் பன்றிகள் மொத்தமாக தவறி விழுந்தன. இவற்றில் 9 பன்றிகள் நீரில் மூழ்கி இறந்தன. 5 பன்றிகள் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தன. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், செங்கம் தீயணைப்பு நியைத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
     உடனடியாக செங்கம் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காட்டுப் பன்றிகளையும், நீரில் மூழ்கி இறந்த பன்றிகளையும் மீட்டனர். பின்னர், அவற்றை வனத் துறையினரிடம் தீயணைப்புப் படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து, உயிருடன் மீட்கப்பட்ட பன்றிகளுக்கு வனத் துறையினர் சிகிச்சை அளித்து வனப் பகுதியில் விட்டனர். உயிரிழந்த பன்றிகளை உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai