Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலங்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
     திருவண்ணாமலையில் திருக்குறள் தொண்டு மையம் சார்பில், காந்தி சிலை எதிரில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு புலவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
     வருவாய் ஆய்வாளர் காவேரி, சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன், ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் வீ.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளுவர் வேடம் தாங்கிய திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார்.
     திருவண்ணாமலை வட்டாட்சியர் கு.மனோகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடக்கிவைத்தார். தேரடி தெரு, திருவூடல் தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், காமராஜர் சிலை எதிரே நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டு மைய நிர்வாகிகள், வாக்களிப்பது நம் கடமை, நம் உரிமை. 100 சதவீதம் வாக்களிப்போம் என்று முழக்கங்களை எழுப்பிச்சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
     இதில், தொண்டு மைய நிர்வாகிகள் சுப்பிரமணி, வாசுதேவன், அன்பழகன், அசோக்குமார், பலராமன், மோகன், சேதுமாதவன், சீனிவாச வரதன், மாணிக்கம், சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     செய்யாறு: இதேபோல, செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, வாக்குச் சாவடி அலுவலர்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
     ஊர்வலத்தை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இதில், வட்டாட்சியர் ஆ.மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai