Enable Javscript for better performance
வாக்குச்சாவடி மையங்களில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச்சாவடி மையங்களில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு

    By DIN  |   Published on : 27th March 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஜி.அரவிந்த் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி, சோமாசிபாடி, ஐங்குணம், கழிக்குளம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஜி.அரவிந்த் ஆய்வு செய்தார்.
     குறைபாடுகள் காணப்பட்ட சில வாக்குச்சாவடி மையங்களில் தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உதவி இயக்குநர் உத்தரவிட்டார்.
     ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மகாதேவன், ஒன்றிய மேற்பார்வையாளர் ராதிகா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai