Enable Javscript for better performance
201 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள்- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு நிறுனங்களின் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 201 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
     சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறைகள் சார்பில், அந்தந்த துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது. இதில், டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், அசோக் லேலண்ட், என்.எஸ்.என், கணேஷ் பில்டர்ஸ், ரெனால்ட் நிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.
     நேர்காணலில் மொத்தம் 201 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
     விழாவுக்கு கல்லூரித் தாளாளர் செல்வராசன் தலைமை வகித்தார். செயலர் டாக்டர் செந்தில்குமார், துணைத் தலைவர் பிரவீன்குமார், துணை நிர்வாக அலுவலர் போதனாபிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முருகன் வரவேற்றார்.
     டிவிஎஸ் நிறுவன பொது மேலாளர் மோகன்முத்து கலந்து கொண்டு 201 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு அலுவலர்அறிவரசு மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai