Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.95 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.95 லட்சம் ரொக்கம், 199 கிராம் தங்கம், 564 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
     திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்நாடு, வெளி நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் வந்து, செல்கின்றனர். மாதந்தோறும் பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். எனவே, மாதந்தோறும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.
     அதன்படி, மார்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ஜான்சிராணி (திருவண்ணாமலை), சுரேஷ் (மேல்மலையனூர்) ஆகியோர் மேற்பார்வையில், 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
     இதில், ரூ.94 லட்சத்து 64 ஆயிரத்து 911 ரொக்கம், 199 கிராம் தங்கம், 564 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது. ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai