Enable Javscript for better performance
உரிய ஆவணங்கள் சமர்ப்பிப்பு: பறிமுதல் பணம் ரூ.15 லட்சம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    உரிய ஆவணங்கள் சமர்ப்பிப்பு: பறிமுதல் பணம் ரூ.15 லட்சம் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்து 42 ஆயிரத்து 750 உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது.
     திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, 24 பறக்கும் படைகள், 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை பறக்கும் படைகள் சார்பில் ரூ.28 லட்சத்து 49 ஆயிரத்து 32-ம், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் சார்பில் ரூ.18 லட்சத்து 47 ஆயிரத்து 490-ம் என மொத்தம் ரூ.46 லட்சத்து 96 ஆயிரத்து 522 பறிமுதல் செய்யப்பட்டது.
     உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், இந்தப் பணத்தில் இதுவரை ரூ.15 லட்சத்து 42 ஆயிரத்து 750 உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.31 லட்சத்து 53 ஆயிரத்து 712-ஐ கொண்டு வந்தவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     இதுதவிர ரூ.90 ஆயிரத்து 985 மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai