Enable Javscript for better performance
திருவண்ணாமலையில் திமுக,கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் திமுக,கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரான சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட அந்தக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
     திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் எதிரில் இருந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட அவர்கள், சந்நிதி தெரு, கட்டபொம்மன் தெரு, பெரியார் சிலை, அண்ணா சிலை, கிருஷ்ணன் தெரு, காந்தி சிலை, தேரடி வீதி, காய்கனி சந்தை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
     வாக்குச் சேகரிப்பின்போது, திமுக மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மருத்துவர் எ.வ.வே.கம்பன், நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிசெல்வன், மதிமுக மாநில நிர்வாகி சீனி.கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி எம்.வீரபத்திரன், எம்.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வே.முத்தையன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai