Enable Javscript for better performance
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகள் தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகள் தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை வரும் மே 23-ஆம் தேதியும் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகளைக் கவனிக்கவும், வரப்பெறும் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் அந்தந்தப் பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி: ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை 04175 -233333, 233366, 9444137000 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.
     ஜோலார்பேட்டை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுயில் இடம்பெற்றுள்ள வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கான உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஆய்வுக்குழு அலுவலருமான து.கிருஷ்ணமூர்த்தியை 9444675231 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், நாட்றாம்பள்ளி வட்டாட்சியருமான உமாரம்யாவை 8940017780 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     திருப்பத்தூர்: திருப்பத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரம், திருப்பத்தூர் சார் - ஆட்சியருமான பி.பிரியங்காவை 9445000418 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருப்பத்தூர் வட்டாட்சியருமான ஆர்.ஆனந்தகிருஷ்ணனை 9445000511 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     செங்கம்: செங்கம் சட்டப் பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியருமான ஆர்.வில்சன் ராஜசேகரை 9445461753 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், செங்கம் வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியருமான என்.சங்கரனை 9976861204 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     திருவண்ணாமலை: திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை கோட்டாட்சியருமான எம்.ஸ்ரீதேவியை 9445000420 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருமான சாப்ஜானை 9750522269 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்டக் கலால் உதவி ஆணையருமான எம்.தாஜூதீனை 9445074597 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், கீழ்பென்னாத்தூர் வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியருமான எஸ்.ராம் பிரபுவை 9952151392 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான ஜி.வி.பரிமளாவை 9444484765 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலசப்பாக்கம் வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியருமான ராஜராஜேஸ்வரியை 9585856632 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     ஆரணி மக்களவைத் தொகுதி: போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மைலம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கிய ஆரணி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலருமான பொ.ரத்தினசாமியை 04175233006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
     போளூர்: ஆரணி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள போளூர் சட்டப் பேரவைத் தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட விநியோக அலுவலருமான எஸ்.அரிதாûஸ 9445000193 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், போளூர் வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியருமான பாலாஜியை 9488640440 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     ஆரணி: ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆரணி கோட்டாட்சியருமான எல்.மைதிலியை 9025313980 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆரணி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருமான பெருமாளை 9842652301 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     செய்யாறு: செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், செய்யாறு கோட்டாட்சியருமான ஆர்.அன்னம்மாளை 9445000419 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், செய்யாறு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருமான கிருஷ்ணசாமியை 8825828432 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     வந்தவாசி: வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான ஏ.என்.லாவண்யாவை 9445477829 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், வந்தவாசி வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியருமான சுபாஷ் சந்தரை 9043718834 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலருமான சி.ஜெயக்குமாரை 9790280800 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், செஞ்சி வட்ட ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியருமான எஸ்.கலாவை 9976951669 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     மயிலம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப் பேரவைத் தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், விழுப்புரம் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியருமான அம்புரோஸியா நவிஸ்மேரியை 9445461760 என்ற எண்ணிலும், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலருமான சுப்பராயனை 9791557364 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை அந்தந்த தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மக்களவைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள தலா 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் தொடர்பான புகார்களை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai