Enable Javscript for better performance
பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
     வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (68). இவர், திமுக முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஆவார். கமலக்கண்ணன் கடந்த
     17-ஆம் தேதி இதே கிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான மரம் அறுக்கும் பட்டறையிலிருந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
     அந்தக் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, அவர் நிலைதடுமாறி பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
     இதில், பலத்த காயமடைந்த கமலக்கண்ணன், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் திருமலை அளித்த புகாரின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai