Enable Javscript for better performance
வந்தவாசியில் சாலைப் பணியை தடுத்து நிறுத்திய திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகப் புகார்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியில் சாலைப் பணியை தடுத்து நிறுத்திய திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகப் புகார்

    By DIN  |   Published on : 28th March 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியில் தேர்தல் விதிமுறைகளை மீறி தார்ச்சாலை அமைக்கப்படுவதாக புகார் தெரிவித்து, சாலை அமைக்கும் பணியை திமுகவினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
     இதையடுத்து, சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட 5 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
     வந்தவாசி நெடுஞ்சாலைத் துறை சார்பில், வந்தவாசி - ஆரணி சாலையில் உள்ள வந்தவாசி மின் வாரிய அலுவலகம் அருகிலிருந்து தனியார் திருமண மண்டபம் வரையுள்ள சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
     இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்ட திமுகவினர் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். தேர்தல் விதிமுறைகளை மீறி சாலை அமைக்கப்படுவதாக புகார் தெரிவித்த அவர்கள், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் ஆர்.அரிக்குமார் மற்றும் வந்தவாசி தெற்கு போலீஸார், சாலை அமைக்க பயன்படுத்திய 2 ரோடு ரோலர்கள், ஒரு தார்சாலை அமைக்கும் இயந்திரம், தார்கலவை நிரம்பிய 2 லாரிகள் ஆகிய 5 வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai