Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை இணை இயக்குநர் என்.விஜயகுமார், செஞ்சிலுவைச் சங்க நிர்வாகச் செயலர்கள் என்.அழகப்பன், எம்.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவைச் சங்கச் செயலர் வீ.மதியழகன் வரவேற்றார். திருவண்ணாமலை வட்டாட்சியர் கு.மனோகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை வாசித்தார். அப்போது, செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
     மேலும், மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பதாகைகளை கையில் ஏந்தியபடி அனைவரும் முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
     நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க புரவலர்கள், துணைப் புரவலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
     இதில், ஹெப்ரான் பள்ளித் தலைவர் பி.டி.எல்.சங்கர், அருணை வித்யா கலை, அறிவியல் கல்லூரிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ஆர்.காவேரி, செஞ்சிலுவைச் சங்கப் பொருளாளர் பாபு கு.ராதாகிருஷ்ணன், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், வருவாய்த் துறையினர் பலர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai