அப்பர் சுவாமிகள் குருபூஜை விழா
By DIN | Published On : 01st May 2019 09:23 AM | Last Updated : 01st May 2019 09:23 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் அப்பர் சுவாமிகள் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அப்பர் சுவாமிகள் திருமடம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, அப்பர் சுவாமிகள் மடத்தின் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். செயலர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளரும், நல் நூலகருமான சிவா வரவேற்றார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அப்பர் செய்த அற்புதங்கள் என்ற தலைப்பில் இசையுரை நிகழ்த்தினார். ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் பரசுராமன், ராஜமனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, அருணாசலேஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் அப்பர் சுவாமிகள் வீதியுலாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.