திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
By DIN | Published On : 05th May 2019 12:04 AM | Last Updated : 05th May 2019 12:04 AM | அ+அ அ- |

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் ப.குப்பன் திருக்குறளின் மேன்மை குறித்துப் பேசினார்.
மேலும், திருவள்ளுவர் வேடமணிந்து திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு அவர் திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் க.பக்தவச்சலம், சுப்பிரமணியம், தலைமை ஆசிரியை கற்பகம், ஆசிரியர் பெ.பார்த்திபன் மற்றும் சீ.கேசவராஜ், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கு.சதானந்தன் நன்றி கூறினார்.