Enable Javscript for better performance
போளூரில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    போளூரில் பல்வேறு கடைகளில் நெகிழிப் பயன்பாடு அதிகரித்துள்ளது இதற்கு தடை விதிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
     தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடைகளில் நெகிழிப் பை மற்றும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்த தடை விதித்தும், அதற்கு மாற்றாக துணியிலான பைகளையும், வாழை இலை, பாக்கு மட்டை, தாமரை இலை என சுற்றுச்சூழலுக்கு உகந்தவற்றை பயன்படுத்தவேண்டும் என அரசாணை வெளியிட்டது.
     இந்த நிலையில், மாநாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி வரை உள்ள கடைகளுக்கு நெகிழியை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தி வந்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து வந்தனர்.
     இந்த நிலையில், போளூர் பேரூராட்சியில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடை, இனிப்புக் கடை, ஜவுளிக் கடை, பூக்கடை, காய்கறி வாரச்சந்தை, கறிக்கடை, இறைச்சிக் கடை என அனைத்துக் கடைகளிலும் நெகிழிப் பைகளை கொண்டு வாங்கும் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே, போளூர் பேரூராட்சி நிர்வாகம் நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
     இதுகுறித்து போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் முகமதுரிஸ்வான் கூறும்போது, நெகிழி ஒழிப்புப் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai