Enable Javscript for better performance
வாகனம் மோதியதில் முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
     வந்தவாசியை அடுத்த அதியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமாவாசைகான் (60). இவர், வெளியம்பாக்கம் சாலையில் மேயவிட்டிருந்த ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வருவதற்காக செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
     இதில் பலத்த காயமடைந்து சாலையோரம் கிடந்தவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் புதன்கிழமை இறந்தார்.
     இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai