சுடச்சுட

    

    விளையாட்டு விடுதியில் சேர வீரர், வீராங்கனைகள் தேர்வு: 60 பேர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 17th May 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கு மாநில அளவிலான வீரர்,-வீராங்கனைகள் தேர்வு வியாழக்கிழமை 2-வது நாளாக நடைபெற்றது. இதில் 60 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்கும் வசதி மற்றும் உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
     இந்த விளையாட்டு விடுதிகளில் 2019-2020-ஆம் கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விளையாட்டுத் துறை சார்பில் 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
     அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு வீரர்கள் தேர்வுக்கான மாநில அளவிலான போட்டிகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
     வளைகோல் பந்து, கூடைப்பந்து, கைப்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 125 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
     இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாக வியாழக்கிழமை 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், மாநிலம் முழுவதும் இருந்து 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai