ஆகாய லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

போளூரை அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போளூரை அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 எழுவாம்பாடி கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த வேதநாயகி உடனுறை ஆகாய லிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் உடைந்தும் காணப்பட்டன.
 இதையடுத்து, ஊர் பொதுமக்கள் சார்பில் கோயிலை புரனமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடத்த செவ்வாய்க்கிழமை யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றன.
 இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை சிறப்பு யாகம் நடத்தி கோயில் விமானத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
 எழுவாம்பாடி, மாம்பட்டு, போளூர், பேட்டை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com