முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
"காசநோய் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை'
By DIN | Published On : 18th May 2019 08:07 AM | Last Updated : 18th May 2019 08:07 AM | அ+அ அ- |

காசநோய் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக 6 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுவதாக வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட காசநோய் துணை இயக்குநர் பி.அசோக் உத்தரவின்பேரில், செய்யாறை அடுத்த பல்லி கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா தலைமை வகித்தார். நெடும்பிறை மருத்துவ அலுவலர் என்.முரளி முன்னிலை வகித்தார்.
முகாமின்போது, இரு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல் இருந்தால், அது காசநோயின் அறிகுறியாகும் என வீடு, வீடாகச் சென்று சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், காசநோய் கண்டறியப்படுவோருக்கு 6 மாதங்கள் இலவசச் சிகிச்சையும், அவர்களின் ஊட்டச்சத்துக்காக 6 மாதங்களுக்கு ரூ.500-ம் வழங்கப்படும் என்று வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, காசநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்ட 62 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் தி.அருளரசு, காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் அன்சர் அலி, காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.