முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 18th May 2019 08:09 AM | Last Updated : 18th May 2019 08:09 AM | அ+அ அ- |

வேட்டவலம் அரசு அரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா தலைமை வகித்தார். சித்த மருத்துவர் சதேஷ் முன்னிலை வகித்தார். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசு உற்பத்தியாகும் இடங்கள், லாவா வளரும் சூழ்நிலைகள், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தூய்மையை பேணுதல், உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவது குறித்து பொதுமக்களிடையே மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில், அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்கள், சுகாதாரச் செவிலியர்கள், கிராம சுகாதாரச் செவிலியர்கள், டெங்கு களப்பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.