முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
படவேடு சோமநாதஈஸ்வரர், அம்மையப்பர் கோயில்களில் வருண பூஜை
By DIN | Published On : 18th May 2019 08:07 AM | Last Updated : 18th May 2019 08:07 AM | அ+அ அ- |

மழை வேண்டி போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள சோமநாதஈஸ்வரர், அம்மையப்பர் கோயில்களில் வருண பூஜை நடைபெற்றது.
தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், கடுமையான வறட்சி நிலவி வருவதால், மழை வேண்டி கோயில்களில் வருண பூஜை நடத்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.
அதனடிப்படையில், போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள படைவீடு ரேணுகாம்பாள் கோயிலைச் சார்ந்த சோமநாதஈஸ்வரர், அம்மையப்பர் கோயில்களில் வருண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலர்கள் கார்த்திகேயன், மோகன், மேலாளர் மகாதேவன் மற்றும் சீனுவாசன், ரவி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.