முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
லாட்டரி விற்ற 3 பேர் கைது
By DIN | Published On : 18th May 2019 08:09 AM | Last Updated : 18th May 2019 08:09 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்றதாக மாற்றுத் திறனாளி உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார் வெள்ளிக்கிழமை பிற்பகல் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவொளிப் பூங்கா பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை அடுத்த கடப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ராமமூர்த்தி (35) தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தாராம்.
இவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் கிராமம் அலாவுதீன் (60), கருந்துவாம்பாடி கிராமம் கிருஷ்ணமூர்த்தி (64) ஆகியோர் வாங்கிக் கொண்டிருந்தனராம்.
இதையடுத்து, மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஏராளமான தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.