முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 18th May 2019 08:08 AM | Last Updated : 18th May 2019 08:08 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட 25 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஜி.அரவிந்த் தலைமையில், திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், மோகன்குமார், நாராயணன், குகனேஸ்வரன் உள்ளிட்டோர் வேங்கிக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, இனிப்பகங்கள், பழக்கடைகள், பல்பொருள் அங்காடி உள்ளிட்ட கடைகளில் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் குழு கைப்பற்றி அழித்தது. மேலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திய 15 கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.