திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தர்கள் கிரிவலம்
By DIN | Published On : 20th May 2019 09:53 AM | Last Updated : 20th May 2019 09:53 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பௌர்ணமியையொட்டி, தொடர்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
வைகாசி மாதப் பௌர்ணமியையொட்டி, சனிக்கிழமை (மே 18) அதிகாலை 4.26 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 19) அதிகாலை 3.24 மணி வரை கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, சனிக்கிழமை அதிகாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
2-வது நாளாக...: தொடர்ந்து, 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் இரவு வரை ஏராளமானோர் கிரிவலம் வந்தவண்ணம் இருந்தனர். முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கிரிவலம் வந்த பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது. மாலை 3 மணிக்குப் பிறகு இரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.