திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் புகட்டும் நிகழ்ச்சி
By DIN | Published On : 23rd May 2019 08:22 AM | Last Updated : 23rd May 2019 08:22 AM | அ+அ அ- |

சைவ சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் புகட்டும் ஐதீக நிகழ்ச்சி பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, காலை 6 மணி அளவில் சுவாமி, அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் உத்ஸவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாள் ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குளத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர், திருக்குளத்து மண்டபத்தில் பெரியநாயகி அம்பாள், திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் புகட்டும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.