வாக்குகள் எண்ணும் மையங்களில் ஐ.ஜி. ஆய்வு
By DIN | Published On : 23rd May 2019 08:23 AM | Last Updated : 23rd May 2019 08:23 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையங்களை புதன்கிழமை வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (மே 23) எண்ணப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் திருவண்ணாமலையில் எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில், திருவண்ணாமலை தொகுதி வாக்குகள் எண்ணும் மையமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஆரணி தொகுதி வாக்குகள் எண்ணும் மையமான சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களை புதன்கிழமை வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்புப் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி உடனிருந்தார்.