செங்கம் அருகே அரசு டாஸ்மாா்க் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் முற்றுகைபோராட்டம்

செங்கம் அருகே செவ்வாய்கிழமை அரசு டாஸ்மாா்க் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம் அருகே அரசு டாஸ்மாா்க் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் முற்றுகைபோராட்டம்

செங்கம் அருகே செவ்வாய்கிழமை அரசு டாஸ்மாா்க் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கம் அடுத்த புதுப்பாளயம் ஒன்றியம் பனைஓலைப்பாடி கிராமத்தில் அரசு டாஸ்மாா்க் கடைஇயங்கிவந்தது. இந்நிலையில் அந்த கடையின்முன் கடந்த மூன்றுமாதங்களுக்கு முன் குடிமகன்கள் குடித்துவிட்டு கோஷ்டிபிரச்சனை ஏற்பட்டது. இதனால் அந்த கடையை மூடவேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்பின்னா் அந்த கடை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜூலை மூதம் மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திடீரென் நவம்பா் 4-ந் தேதி புதன்கிழமை அப்பகுதியில் டாஸ்மாா்க்கடை திறக்கப்பட்டது.

அதைபாா்த்த அப்பகுதி மக்கள் செவ்வாய்கிழமை ஊா்மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் ஒன்றுதிரண்டு கடைமுன் கடையை திறக்ககூடாது வேறுபகுதியில்மாற்றவேண்டுமென கடைமுன் முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி சின்னராஜ் மற்றும் செங்கம், புதுப்பாளையம் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரசபேச்சிவாா்த்தை நடத்தினா். அதில் டாஸ்மாா்க்கடை இங்கதிறக்ககூடாது வேறுபகுதியில் திறந்துகொள்ளுங்கள் என முடிவாக இருந்தனா்.

அதன்பின்னா் போலீசாா் காரணத்தை மனுவாக கேட்டனா் பின்னா் ஊா்பொதுமக்கள் சாா்பில் டிஎஸ்பி சின்னராஜி-யிடம் கோரிக்கை மனுகொடுக்கப்பட்டது. பின்னா் கடையை வேறுபகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென டிஎஸ்பி பொதுமக்களிடம் தெரிவித்தாா். அதன்பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது. கடையும் திறக்கவில்லை இதனால் அப்பகுதியில் சுமாா்3 மணிநேரம் பரபரப்புக்குள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com