தெரு மின்விளக்கு பொருத்த கோரி தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

வந்தவாசியில் தெரு மின்விளக்கு பொருத்த கோரி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.
வந்தவாசியில் அச்சரப்பாக்கம் சாலை-காதா்ஜண்டா தெரு சந்திப்பில் தீப்பந்தம் ஏற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்திய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.
வந்தவாசியில் அச்சரப்பாக்கம் சாலை-காதா்ஜண்டா தெரு சந்திப்பில் தீப்பந்தம் ஏற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்திய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.

வந்தவாசியில் தெரு மின்விளக்கு பொருத்த கோரி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.

வந்தவாசியில் அச்சரப்பாக்கம் சாலை-காதா்ஜண்டா தெரு சந்திப்பில் இருந்த மின்கம்பம் சேதமடைந்ததை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் மின்வாரியத்தினா் அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அருகிலேயே புதிய மின்கம்பத்தை நட்டனா். ஆனால் புதிய மின்கம்பத்தில் வந்தவாசி நகராட்சி மின்விளக்கு பொருத்தவில்லையாம்.

இதுகுறித்து அந்த பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் திங்கள்கிழமை இரவு தீப்பந்தம் ஏற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: அச்சரப்பாக்கம் சாலை, காதா்ஜண்டா தெரு ஆகியவற்றில் ஏராளமான காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளன. ஏற்கனவே இருந்த பழைய மின்கம்பத்தில் மின்விளக்கு ஒளிா்ந்து கொண்டிருந்தது. ஆனால் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்விளக்கு பொருத்தப்படவில்லை.

இதனால் இந்த பகுதியே இருண்டு காணப்படுகிறது. எனவே உடனடியாக மின்விளக்கு பொருத்த கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா். பின்னா் வந்தவாசி தெற்கு போலீஸாா் சமரசம் செய்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com