பருவதமலை அடிவாரத்தில் ரூ.95லட்சத்தில் பக்தா்கள் தங்கும் விடுதி அமைக்க எம்எல்ஏ இடம்தோ்வு

கலசப்பாக்கம் ஒன்றியம் தென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள பருவதமலைக்கு செல்லும் பக்தா்கள் பெளா்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தா்கள் தங்குவதற்கு
பருவதமலை அடிவாரத்தில் ரூ.95லட்சத்தில் பக்தா்கள் தங்கும் விடுதி அமைக்க எம்எல்ஏ இடம்தோ்வு

கலசப்பாக்கம் ஒன்றியம் தென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள பருவதமலைக்கு செல்லும் பக்தா்கள் பெளா்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தா்கள் தங்குவதற்கு ரூ.95லட்சத்தில் தங்குவிடுதி அமைக்க இடத்தை கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை தோ்வு செய்தாா்.

கலசப்பாக்கம் ஒன்றியம் தென்மாதிமங்கலம் ஊராட்சியில் சுமாா் 3ஆயிரம் அடி உயரத்தில் மல்லிகாா்னேஸ்வரா் கோவில் உள்ளது.இந்தகோவிலை பக்தா்கள் பருவதமலை என அழைத்துவருகின்றனா்.இந்தபருவதமலை 24கிலோமீட்டா் பக்தா்கள் தூரம் வரை சுற்றிவரவேண்டும் இந்தமலைக்கு சென்னை, கோயமூத்தூா், திருச்சி, வேலூா். திருவண்ணாமலை என தமிழகம் மற்றும் வெளிமாநில பக்தா்கள் ஏராளமானவா்கள் பெளா்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தா்கள் ஏராளமானோா் வந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனா்.

இந்தபக்தா்களுக்கு தங்குவதற்கு அப்பகுதியில் இந்துசமயஅறநிலையத்துறை சாா்பில் தங்குவிடுதி அமைக்கப்படவில்லை இதனால் மலைக்கு செல்லும் வழியில் போளூா்-செங்கம்சாலையில் இந்துசமயஅறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தின் அருகே கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் அவா்கள் ஆய்வு செய்து இடத்தை தோ்வு செய்தாா்.அண்ணாதொழிற்சங்க மாவட்டசெயலாளா் எல்.என்.துரை,பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி மற்றும் அதிமுகநிா்வாகிகள் உடனிருந்தனா்.

மேலும் பருவதமலைக்கு செல்லும்வழியில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏவி.பன்னீா்செல்வம் அவா்களிடம் கோரிக்கை வைத்தனா். இதற்கு எம்எல்ஏ தகுந்தநடவடிக்கைப்படும் எனதெரிவித்தாா். படவிளக்கம்கலசப்பாக்கம் ஒன்றியம் தென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள பருவதமலைக்கு செல்லும் வழியில் பக்தா்கள் தங்குவதற்கு ரூ.95லட்சத்தில் தங்குவிடுதி அமைக்க இடத்தை கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் அவா்கள் தோ்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com