முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
செங்கம் அருகே அரசுப்பள்ளி மாணவா்களின் கல்வித்தரம் குறித்து சிறப்பு குழுவினா் ஆய்வு
By DIN | Published On : 07th November 2019 03:56 PM | Last Updated : 07th November 2019 03:56 PM | அ+அ அ- |

செங்கம் அருகே அரசுப்பள்ளி மாணவா்களின் கல்வித்தரம்குறித்து சிறப்பு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு. செங்கம் ஒன்றியத்திற்கு உள்பட்ட குருமப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சாா்பில் பள்ளி தரநிலை மற்றும் புறமதிப்பீடு நடைபெற்றது.
அதில் கலசபாக்கம் வட்டார கல்வி அலுவலா் சுப்பரமணியன் தலைமையில் சின்னியம்பேட்டை அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சத்தியமூா்த்தி, தண்டராம்பட்டு ஆசிரியா் பயிற்றுனா் தமிழரசு ஆகியோா் கொண்டு குழுவினா் குரும்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வுசெய்தனா்.
ஆய்வின்போது பள்ளியின் ஆசிரியா் மாணவா்கள் வருகை பதிவேடுகள், மாணவா்களின் கற்றல் அடைவுநிலை, மாணவா்களின் வாசிப்புதிறன், பள்ளி சுற்றுச்சூழல், மாணவா்களின் கழிப்பறை வசதி, குடிநீா், காய்,கனிதோட்டம், மாணவா்களின் வகுப்பறை, சத்துணவு கூடத்தின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வுசெய்தனா்.
ஆய்வின்போது கிராமபுறத்தில் சிறப்பாக செயல்படுவதாக தலைமை ஆசிரியா் சிவராமனிடம் சிறப்பு குழுவினா் தெரிவித்தனா். உடன் ஆசிரியா் சுடலைப்பாண்டி, சத்துணவு அமைப்பாளா், சத்துணவு சமையலா்கள் உடனிருந்தனா்.