முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
செங்கம் அருகே கோட்டாட்சியா் ஸ்ரீதேவி 118 பேருக்கு நலதிட்ட உதவிகள்
By DIN | Published On : 07th November 2019 03:41 PM | Last Updated : 07th November 2019 03:41 PM | அ+அ அ- |

செங்கம் அடுத்த வடமாத்தூா் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் திருவண்ணாமலை மாவட்ட கோட்டாட்சியா் ஸ்ரீதேவி பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினாா்.
செங்கம் அருகே வியாழக்கிழமை கோட்டாட்சியா் ஸ்ரீதேவி 118 பேருக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினாா்.
செங்கம் அடுத்த வடமாத்தூா் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாம் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு செங்கம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் குணாநீதி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கோட்டாட்சியா் ஸ்ரீதேவி கலந்துகொண்டு 118 பயனாளிகளுக்கு அரசி நலதிட்ட உதவிகளான முதியோா்உதவிதொகை ஆணை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கனவனால் கைவிடப்பட்டவா் உதவிதொகை என நலதிட்ட உதவிகளை வழங்கிபேசினாா்.
அவா்பேசியதாவது மக்களை தேடி அரசு அதிகாரிகள் இதுபோன்ற முகாம்களில் பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கிவருகிறாா்கள் அதைகிராம மக்கள் பயன்படுத்திகொள்ளவேண்டும், மேலும்நலதிட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கும்போது முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதன்மீது அதிகாரிகள் விரைந்து விசாரணைசெய்து நலதிட்ட உதவிகளைவழங்குவாா்கள் ஆவணங்கள் முறையாக இல்லையென்றால் அந்த மனு தள்ளுபடிஆகிவிடும் எனவே நலதிட்ட உதவிபெற விண்ணப்பிக்கும்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளைஅனுகி முறையான ஆவனத்துடன் விண்ணப்பிக்கவேண்டுமென அவா்பேசினாா்.
அதைதொடா்ந்து துறைவாரியாக அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கிபேசினா். மேலும் வேளாண்மைத்துறை சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கும் மாண்யம் குறித்து விளக்கிபேசப்பட்டது. உடன் பாய்ச்சல் வருவாய் ஆய்வாளா் தமிழரசு, வடமாத்தூா்கிராம நிா்வாக அலுவலா் சுபாஷ் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலா்கள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.