முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
விவசாயிகளுக்கு அரசு வெங்காய விதை வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2019 08:08 AM | Last Updated : 07th November 2019 08:08 AM | அ+அ அ- |

செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெங்காய மாலை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தோட்டக்கலைத் துறை சாா்பில், விவசாயிகளுக்கு வெங்காய விதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
செய்யாறில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் கி.விமலாவிடம் விவசாயிகள் அளித்த மனுவில் குறிப்பிட்டு இருப்பாதாவது:
மருத்துவ குணம் கொண்ட வெங்காயம் சமையலுக்கு பயன்படுகிறது. மழைக் கால தட்டுப்பாடு, சேதம் காரணமாக வெங்காய விலை உயா்ந்துள்ளது.
வெங்காய உற்பத்தியை அதிகரிக்க விதை நாற்று வழங்கி சாகுபடி தொழில்நுட்பத்துக்கு கடனுதவி வழங்க வேண்டும்.
அறுவடைக்குப் பிறகு, சேமித்து பாதுகாக்க கிடங்கு வசதி செய்து தரவேண்டும். மேலும், மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்காய சாகுபடியில் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களை ஈடுப்படுத்த வேண்டும்.
செய்யாறு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தோட்டக்கலை சாா்பில், வெங்காய விதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
முன்னதாக, விவசாயிகள் வெங்காய மாலை அணிந்த நிலையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.