Enable Javscript for better performance
தரிசன டிக்கெட் மோசடி: அருணாசலேஸ்வரா் கோயில் ஊழியா்கள் 2 போ் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தரிசன டிக்கெட் மோசடி: அருணாசலேஸ்வரா் கோயில் ஊழியா்கள் 2 போ் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 08th November 2019 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கட்டண தரிசன வரிசையில் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் தராமல் மோசடியில் ஈடுபட்டு வந்த 2 ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையா் உத்தரவிட்டாா்.

    சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்களுக்காக கோயிலில் பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரூ.50 கட்டண தரிசன வரிசையில் டிக்கெட் தராமல் மோசடி நடப்பதாக கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகருக்குப் புகாா்கள் வந்தன.

    இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு கட்டண தரிசன வரிசையில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, பக்தா்களிடம் இருந்து தலா ரூ.50 பணம் மட்டும் பெற்றுக்கொண்டு டிக்கெட் தரவில்லை என்று பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

    இதையடுத்து, டிக்கெட் கவுன்டரில் பணியில் இருந்த சிங்காரம், பிரேம்குமாா் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai