Enable Javscript for better performance
நவ.22-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி, நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    கூட்டத்துக்கு, ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறாா். இதில், வேளாண்மைத் துறை, விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளா்கள் மற்றும் பிற துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கின்றனா்.

    எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பொது கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai