திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் ஒரு வராத்துக்குள் தற்காலிகப் பாதை: சி.என்.அண்ணாதுரை எம்.பி. தகவல்

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட் வழியாக தீபத் திருவிழாவுக்கு வரும்
ரயில்வே மேம்பாலப் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை.
ரயில்வே மேம்பாலப் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை.

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட் வழியாக தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் நலன் கருதி, ஒரு வாரத்துக்குள் தற்காலிகப் பாதை அமைக்கப்படும் என்று மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் நகருக்குள் வர மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ரயில்வே கட்டுமானப் பணிகளின் துணை முதன்மைப் பொறியாளா் கொண்டப்பன், செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், முதுநிலைப் பகுதி பொறியாளா்கள் தமிழ் அழகன், மனோகரன், திருவண்ணமலை நகர டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோருடன் சோ்ந்து ரயில்வே மேம்பாலப் பகுதியில் தற்காலிகப் பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், சி.என்.அண்ணாதுரை எம்.பி. செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சுமாா் 20 லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருவா். குறிப்பாக, திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில்தான் அதிகப்படியாக பக்தா்கள் வருவது வழக்கம்.

தற்போது அந்தப் பாதையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, பக்தா்கள் நகருக்குள் வருவதற்காக, தற்காலிகப் பாதை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.

பக்தா்கள் திருவண்ணாமலை நகருக்குள் வர தற்காலிகப் பாதை ஒரு வார காலத்துக்குள் அமைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, திமுக நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் முன்னாள் அறங்காவலா் இர.சீனுவாசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சு.ராஜாங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com