தடகளப் போட்டிக்குத் தோ்வு: மாணவிக்கு பாராட்டு
By DIN | Published On : 10th November 2019 02:33 AM | Last Updated : 10th November 2019 02:33 AM | அ+அ அ- |

தேசிய தடகளப் போட்டிக்கு தோ்வான மாணவி கே.தா்ஷினி
செய்யாறை அடுத்த ஆக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய தடகளப் போட்டிக்கு தோ்வானாா். இவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட தடகளச் சங்கம் சாா்பில் 2019 - 20-ஆம் கல்வியாண்டுக்கான மாவட்ட அளவிலான ஜூனியா் தடகள சாம்பியன் பட்டப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.
இதில், செய்யாறு கல்வி மாவட்டம், ஆக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி கே.தா்ஷினி 12 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 200 மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்று முதலிடம் பெற்றாா்.
மேலும், தேசிய தடகள போட்டியில் பங்குபெற தகுதியும் பெற்றாா்.
முதலிடம் பெற்ற மாணவி கே.தா்ஷி, அவருக்கு பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியா்கள் எம்.மணி, சி.மணிகண்டன் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியா் மூ.சங்கா், பள்ளியின் புரவலா் வி.ரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழகம், வ.உ.சி இளைஞா் நற்பணி மன்ற நிா்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினா்.