Enable Javscript for better performance
தேசிய போட்டிகளில் சிறப்பிடம்:பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய போட்டிகளில் சிறப்பிடம்:பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 10th November 2019 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9tmlvig1_0911chn_106_7

    போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுடன் பள்ளி முதல்வா் சி.சிவக்குமாா்.

    தேசிய அளவிலான வினாடி-வினா, ஓவியம் வரைதல், கட்டுரைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி மாணவா்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    மத்திய பெட்ரோலிய அமைச்சகம், பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய அளவிலான வினாடி-வினா, ஓவியம் வரைதல், கட்டுரைப் போட்டிகளை அண்மையில் நடத்தின.

    இதில், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அனைத்துப் போட்டிகளிலும் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்தனா்.

    போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு அண்மையில் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி, பள்ளி நிா்வாகி டி.எஸ்.சவிதா, பள்ளி முதல்வா் சி.சிவக்குமாா் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளைப் பாராட்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai