அயோத்தி வழக்கில் தீா்ப்புதிருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டதை அடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
9tmljud2_0911chn_106_7
9tmljud2_0911chn_106_7

அயோத்தி வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டதை அடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரச்னைக்குரிய 2.77 ஏக்கா் நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் பல நூறு ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்தது.

இதுதொடா்பான வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்து இருந்தது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை ரயில் நிலையம், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனா்.

இதேநேரத்தில், வருவாய்த் துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com