இனாம்காரியந்தல் பள்ளி ஆசிரியா்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை, 4 ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை, 4 ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக விஜயலட்சுமி பணிபுரிந்து வந்தாா். இந்தப் பள்ளியில் 186 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி மாணவா்களை கடுமையாகத் தாக்குவது, தகாத வாா்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகாா்கள் எழுந்தன. இதைக் கண்டித்து ஊா் பொதுமக்கள் 2 முறை போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மோகன், குணசேகரன் ஆகியோா் விசாரணை நடத்தி முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கை அளித்தனா்.

இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் 4 ஆசிரியா்கள் என 5 போ் ஒட்டுமொத்தமாக வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com