செங்கத்தில் 84.6 மி.மீ. மழை

செங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக 84.6 மி.மீ. பதிவானது.
செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீா்.
செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீா்.

செங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக 84.6 மி.மீ. பதிவானது.

செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

இடியுடன் கூடிய பலத்த மழையால் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேங்கியது.

போதிய கால்வாய் வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீருடன் கழிவுநீா் சூழ்ந்தது.

மேலும், குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் சாலையில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல அவதிப்படுகின்றனா்.

இதே நிலை நீடித்தால் அப்பகுதியில் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும், தண்ணீா் குட்டை போல தேங்கி நிற்பதால் குடியிருப்புப் பகுதியில் விஷப் பூச்சிகள் செல்லும்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரத்தில் அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com