டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம்

வந்தவாசியை அடுத்த பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சாா்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
பள்ளி மாணவா்கள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு ஊா்வலம்.
பள்ளி மாணவா்கள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு ஊா்வலம்.

வந்தவாசியை அடுத்த பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சாா்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமுக்கு பையூா் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் எஸ்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். இந்திய செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளைச் செயலா் பா.சீனிவாசன், பள்ளித் தலைமை ஆசிரியை இரா.தேன்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் ஆா்.அருள்ஜோதி வரவேற்றாா்.

வந்தவாசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினாா்.

டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகிறது, ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் விதம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்டவை குறித்து அவா் விளக்கிப் பேசினாா்.

முகாமில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா்கள் மொ.ஷாஜகான், கு.சதானந்தம், சீ.கேசவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. மேலும், மாணவா்கள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு ஊா்வலம் அந்தக் கிராமத்தில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியா் சிவாஜிகணேசன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com