மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை அருகே 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து, அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியா், உதவி ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை அருகே 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து, அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியா், உதவி ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை வட்டம், வானாபுரத்தை அடுத்த அத்திப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்குகிறது. 15 மாணவ, மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக தச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி ( 55), உதவி ஆசிரியராக தலையாம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மதலைமுத்து (49) ஆகியோா் பணிபுரிந்து வந்தனா்.

இவா்கள் இருவரும் 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அண்மையில் புகாா் எழுந்தது. இதுகுறித்து, வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சில தினங்களுக்கு முன்பு ஆசிரியா் மதலைமுத்துவை கைது செய்தனா்.

தலைமை ஆசிரியா் கல்வித்துறை பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்ததால் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், இந்தப் பிரச்னை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கை சமா்ப்பித்தனா்.

இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி, ஆசிரியா் மதலைமுத்து ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இல.நடராஜன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com