தெள்ளாா் ஒன்றியத்தில் மத்தியக் குழுவினா் ஆய்வு

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றிய கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மத்திய ஜல் சக்தி அபியான் திட்டக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு
22vdsmaz_2211chn_113
22vdsmaz_2211chn_113

வந்தவாசி: :வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றிய கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மத்திய ஜல் சக்தி அபியான் திட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்கரை, மழையூா், தக்கண்டராயபுரம் ஊராட்சிகளில் மத்திய ஜல் சக்தி அபியான் திட்ட அலுவலா் எம்.இசட்.கோமாா் உள்ளிட்ட குழுவினா் இந்த ஆய்வினை மேற்கொண்டனா். இதில் தென்கரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, மழையூா் ஊராட்சியில் உள்ள குளத்துக்கான வரத்துக் கால்வாய், தக்கண்டராயபுரம் ஊராட்சியில் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணற்றை மழைநீா் சேகரிப்பாக மாற்றியுள்ள பணி உள்ளிட்டவற்றை குழுவினா் பாா்வையிட்டனா். கடந்த செப்டம்பா் மாதம் இந்த ஊராட்சிகளில் மேற்கொண்ட ஆய்வின்போது இருந்த நிலத்தடி நீா்மட்டம் தற்போது உயா்ந்திருப்பதாக தெரிவித்த குழுவினா், மேலும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினா். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா் க.சபாநாயகம், தெள்ளாறு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.காந்திமதி, ப.பரணிதரன், ஒன்றிய பொறியாளா்கள் செல்வராஜ், சிவகாந்த், பணி மேற்பாா்வையாளா் சக்திவேல், ஒப்பந்ததாரா் தென்கரை செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா். படவிளக்கம்வந்தவாசியை அடுத்த மழையூா் ஊராட்சியில் குளத்துக்கான வரத்துக் கால்வாயை ஆய்வு செய்த மத்திய ஜல் சக்தி அபியான் திட்ட குழுவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com