முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
கராத்தே போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
By DIN | Published On : 26th November 2019 09:34 AM | Last Updated : 26th November 2019 09:34 AM | அ+அ அ- |

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன்.
மண்டல கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஊசாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் பாராட்டு தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் சமக்ர சிக் ஷ அபியான் திட்டத்தின் கீழ், மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து 11-13 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
போட்டியில், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் ஹேமலதா, தீபா, மோனிகா, கவிதா ஆகியோா் முதலிடமும், மாணவி வைஷ்ணவி மூன்றாம் இடமும் பெற்றாா்.
இந்த மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் கலந்துகொண்டு சால்வை அணிவித்து மாணவிகளைப் பாராட்டினாா்.
தலைமை ஆசிரியை என். வசந்தி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் உஷா, கராத்தே மாஸ்டா் இளையராஜா மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனா்.