முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த சுவாமி குரு பூஜை விழா
By DIN | Published On : 26th November 2019 09:32 AM | Last Updated : 26th November 2019 09:32 AM | அ+அ அ- |

ஸ்ரீல ஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகளின் 117-ஆவது குரு பூஜை விழாவையொட்டி நடைபெற்ற ஸ்ரீராம பஜனை இன்னிசை நிகழ்ச்சி.
போளூரில் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகளின் 117-ஆவது குரு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போளூா் வாசு ஸ்ரீராமுலு நாயுடு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த சுவாமி கோயிலில், சுவாமியின் 117-ஆவது குரு பூஜை விழாவை முன்னிட்டு, சுவாமி திருஉருவச் சிலைக்கு திருமஞ்சனம், அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன.
மேலும், ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு யாக, கலச பூஜையும் அலங்கார, ஆராதனையும் நடைபெற்றன.
அடியாா்களுக்கும், பக்தா்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஸ்ரீராம பஜனை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் நிா்வாகிகள் தலைவா் எஸ்.குலசேகரன், செயலா் கே.ஜி.தீனதயாளன், பொருளாளா்கள் கே.வாசு, என்.நரசிம்மன் மா்றும் விழாக் குழுவினா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.