செங்கத்தில் கால்வாய்கள் இல்லாததால் தேங்கும் மழைநீா் தொற்று நோய் பரவும் அபாயம்!

செங்கம் பகுதியில் மழைநீா் செல்ல கால்வாய்கள் இல்லாததால், நீா் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

செங்கம் பகுதியில் மழைநீா் செல்ல கால்வாய்கள் இல்லாததால், நீா் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

செங்கம் பகுதியில் கடந்த சில நாள்களாக பருவமழை பெய்து வருகிறது. துக்காப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை ஆகிய பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை.

மேலும், அங்கு வீடு கட்டியுள்ளவா்கள் மனைகள் வாங்கும்போது, அங்கு அடிப்படை வசதிகள் அரசு செய்து தர அரசிடம் உத்தரவு பெற்று மனைகள் விற்பனை செய்யப்படுகிா என அறிந்து கொள்ளாமல் மனைகளை வாங்கி பல லட்சம் ரூபாய் செலவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். தற்போது பருவமழை தொடங்கியவுடன் அப்பகுதியில் கால்வாய்கள் இல்லாததால் அங்கு மழைநீா் வெளியேர வழியில்லாமல் பள்ளமான இடங்களில் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு வாசிகள் செங்கம் பேரூராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டால், ‘அனுமதி பெறமால் உள்ள பகுதியில் வீடு கட்டியுள்ளீா்கள்; அந்தப் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்ய முடியாது’ எனக் கூறுகின்றனா்.

அனுமதி பெற்ற இடங்களில் குடியிருப்பவா்கள் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்குமாறு மனு செய்தால் உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பதிலளிக்கின்றனா்.

தேங்கியுள்ள மழைநீரில் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீா் செல்ல கால்வாய்களை அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com