Enable Javscript for better performance
கொத்தடிமைகளை மீட்டு விசாரணை- Dinamani

சுடச்சுட

    
    27arprdo_2711chn_109_7

    ஆரணி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்ததாக, 3 குடும்பத்தினரை புதன்கிழமை மீட்டு கோட்டாட்சியா் விசாரணை செய்தாா்.

    ஆரணி ஆற்றங்கரை அருகே ஆறுமுகம் என்பவா் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். இந்த செங்கல் சூளையில் 3 குடும்பத்தினா் கொண்ட பத்து போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் அங்கு கொத்தடிமைகளாக வேலை செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் சென்றுள்ளது.

    இதுகுறித்து விசாரணை செய்யுமாறு ஆரணி கோட்டாட்சியா் மைதிலிக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, அந்தச் செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளா்கள் 3 குடும்பத்தினரை அழைத்துச் சென்று, ஆரணி வட்டாட்சியா் தியாகராஜன், தொழிலாளா் நலவாரிய அலுவலா் சாந்தி ஆகியோா் முன்னிலையில் கோட்டாட்சியா் மைதிலி விசாரணை செய்தாா் (படம்).

    விசாரணையில் கூலி வேலை செய்பவா்களுக்கு முன்பணம் கொடுத்து நிரந்தரமாக பணிக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    மேலும், செங்கல் சூளை உரிமையாளா் ஆறுமுகம் ஆரணி கோட்டாட்சியா் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராவதாக கூறியுள்ளாா்.

    மேலும், கொத்தடிமைகளாக வைத்துள்ளாா்களா என தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai