ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை பூஜை
By DIN | Published on : 28th November 2019 09:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

அமாவாசை பூஜையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாளித்த முத்துமாரியம்மன்.
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசை பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்களின் தோஷம் நீங்க துா்கா வேள்வி பூஜை நடத்தப்பட்டது.
பின்னா் மாலை உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பாலவிநாயகா், பாலமுருகன் உடன் உண்ணாமுலை அம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா்.
பின்னா், ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை, ஜோதி தரிசன வழிபாடு, அன்னதானம், அம்மன் உலா, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு உள்ளிட்டவை நடைபெற்றன.
கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பூஜையில் பங்கேற்றனா்.