செய்யாற்றில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்!

செங்கம் பகுதி செய்யாற்றில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கம் பகுதி செய்யாற்றில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் இருந்து பேரூராட்சி மூலம் குடிநீா் எடுக்கப்பட்டு செங்கம், துக்காப்பேட்டை, தோக்கவாடி, மில்லத் நகா், தளவாநாய்க்கன்பேட்டை என நகரில் உள்ள 18 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், அரசு மருத்துவமனைக்கும் இந்த ஆற்றில் இருந்துதான் தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், செய்யாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலம் அடியில் தினசரி மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருகின்றனா்.

இதனால் மேம்பாலத்தில் செல்லும்போது துா்நாற்றம் வீசுகிறது. அதற்கும் மேலாக அந்தக் கழிவுகள் குடிநீரில் கலந்து குடிநீா் மாசடையும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் சிலா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனா். அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை தொடா்ந்து கொட்டி வருகின்றனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து கழிவுகளை கொட்டும் நபா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com