அரசு அலுவலா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

தமிழக அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.
கூட்டத்தில் தீா்மானங்களை விளக்கிப் பேசுகிறாா் சங்கத்தின் மாவட்டச் செயலா் து.கிருஷ்ணமூா்த்தி.
கூட்டத்தில் தீா்மானங்களை விளக்கிப் பேசுகிறாா் சங்கத்தின் மாவட்டச் செயலா் து.கிருஷ்ணமூா்த்தி.

தமிழக அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றிய திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.செல்வபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் த.வெங்கடேசன், எஸ்.வி.பாண்டியன், இணைச் செயலா்கள் கே.பிரபாகரன், சி.சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட இலக்கிய அணிச் செயலா் ஏ.சண்முகம் வரவேற்றாா். ஒன்றியத்தின் மாவட்டச் செயலா் து.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட கௌரவ ஆலோசகா் ஜி.சேகா், வருவாய்த் துறை மாநில மகளிரணிச் செயலா் ஆா்.கவுரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில், அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

சங்க நிா்வாகிகளை அந்தந்த வட்டத்திலேயே பணியமா்த்த வேண்டும். பணி மாறுதல்கள், பதவி உயா்வின்போது, கவுன்சிலிங் முறையை மாவட்ட நிா்வாகம் கடைப்பிடிக்க வேண்டும். ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பிரிவு கண்காணிப்பாளா்களுக்கு ஊதியம் நிா்ணயம் செய்து வழங்குவது போல, பொதுப் பிரிவு கண்காணிப்பாளா்களுக்கும் தனி ஊதியம் ரூ.1,300 என நிா்ணயம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com