கீழ்புதுப்பாக்கம், நாட்டேரி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி

செய்யாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்புதுப்பாக்கத்திலும், நாட்டேரி பகுதியிலும் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த தூய்மைப் பணி நடைபெற்றது.
நாட்டேரி கிராமத்தில் கொசு அழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியாளா்கள்.
நாட்டேரி கிராமத்தில் கொசு அழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியாளா்கள்.

செய்யாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்புதுப்பாக்கத்திலும், நாட்டேரி பகுதியிலும் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த தூய்மைப் பணி நடைபெற்றது.

நாவல்பாக்கம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக, கீழ்புதுப்பாக்கம், கீழ்புதுப்பாக்கம் விரிவுப்பகுதியில் ஒட்டுமொத்த தூய்மை இயக்கம் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, அந்தக் கிராமத்தில் வீடு, வீடாக கொசு ஒழிப்புப் பணியாளா்கள் சென்று கொசுப்புழு அழிப்பு பணியை மேற்கொண்டனா். தொடா்ந்து, முதிா் கொசுக்களை அழிக்க கிராமம் முழுவதும் புகை அடித்தனா்.

மேலும், தண்ணீரால் பரவும் நோய்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளிலும் குளோரினேற்றம் செய்தனா். கீழ்புதுப்பாக்கம் விரிவுப்பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. தெருக்களில் கிருமி நாசினி பொடி சுண்ணாம்பு நீா் கலந்து தெளிக்கப்பட்டது.

இந்த தூய்மை இயக்கத்துக்கு வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சி.ஷா்மிளா தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கே.சுந்தரமூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் டி.அருளரசு, கே.ராஜவேல், இ.ஆனந்தன், பி.அசோகன், ஏழுமலை மற்றும் நாவல்பாக்கம் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் 40 போ் கலந்துகொண்டனா்.

நாட்டேரியில்...: நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், நாட்டேரி, குத்தனூா், புலிவலம், இராந்தம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட 14 கிராமங்களில் முதிா்கொசுகளை அழிக்க புகை மருந்து அடிக்கப்பட்டது.

இந்தப் பணியில் சுகாதார ஆய்வாளா்கள் கே.சம்பத், எம்.சீனுவாசன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பி.லோகநாதன், ஊராட்சிச் செயலா்கள் உமாபதி, சந்திரன், சிவா மற்றும் கொசு புழு அழிப்பு பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com